கிரானைட் முறைகேடு: பிஆர்பி உள்பட 4 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை

கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி உள்பட 4 நிறுவனங்கள் மீது 3633 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தமிழக அரசு வழக்கறிஞர், மேலூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் பி.ஆர்.பி , மதுரா, பி.ஆர், பன்னீர் ஆகிய நான்கு கிரானைட் நிறுவனங்கள், அரசுக்கு 1365 கோடியே 96 லட்சம் வருவாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, 3,633 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலா, தனிப்பிரிவு காவல்துறை ஆய்வாளர்கள் பிரகாஷ், ராஜாசிங் ஆகியோர் இன்று தாக்கல் செய்தனர். மதுரை கலெக்டரின் புகாரின் பெயரில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கான குற்றப்பத்திரிகை இதுவாகும்.

- செ.சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!