ராமமோகன ராவ் பறிமுதல் சொத்துக்களை இதற்கு பயன்படுத்தலாம்! வைகோ

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத நிலையில், தலைமைச் செயலாளர் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை பணி நீக்கம் செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!