வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (22/12/2016)

கடைசி தொடர்பு:17:14 (22/12/2016)

முதலில் இவர்களை மாற்றுங்கள்! ஆளுநருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து கடிதம் எழுதியுள்ள  ஸ்டாலின், "பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழக துணைவேந்தர்கள் போயஸ் தோட்டம் சென்று அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை சந்தித்துள்ளது அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் கெடுத்து விட்டது. அதுவும் சசிகலா நடராஜன் அதிமுக கட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இவர்கள் கூறியிருப்பது துணைவேந்தர்கள் அரசியல்வாதிகளாகி விட்டதை அப்பட்டமாக காட்டுகிறது. எனவே மாண்புமிக்க துணைவேந்தர் பொறுப்பை அரசியலாக்கும் நோக்கோடு செயல்பட்ட துணைவேந்தர்களை உரிய பணியாளர் சட்டங்களின்படி பதவி நீக்கம் செய்து, நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் பயிலும் ‘உயர்கல்வியின் தரத்தை’ பாதுகாக்குமாறு ஆளுநரை கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.பத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இணைந்து அண்மையில் சசிகலாவை சந்தித்து அதிமுகவை தலைமையேற்று நடத்தும்படி வலியுறுத்தியதாக பத்திரிகை செய்தி ஒன்று புகைப்படத்துடன் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க