கைதாகிறாரா ராம மோகன ராவ்?

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டின் அதிர்ச்சியில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. 'புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.இவர் இதற்கு முன்னர் நில நிர்வாக கமிஷனராக இருந்தவர்.

ராமமோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டால் அவருக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் அச்சம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். சேகர் ரெட்டியை வைத்து வருமான வரித்துறை, சி.பி.ஐ போட்ட பிள்ளையார் சுழியில் சிக்கி தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், பதவியை இழந்து விட்டார். ராம மோகன ராவ், 20 சீனியர் ஐ.ஏ.ஸ் அதிகாரிகளை பின்னுத்தள்ளிதான் இந்த பதவியில் அமர்ந்த சர்ச்சையும் இருந்தது. இவை அனைத்தையும் , தற்போது வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது

 தமிழக அரசின் 78 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக வருமான வரித்துறையினர் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்துள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது' என அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தற்போது சேகர் ரெட்டி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.வருமான வரித்துறையின் பட்டியலில், இன்னும் பலர் இருப்பதால், விரைவில் ராம மோகன ராவ் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!