சதம் அடிக்க வைத்த ஊட்டி ரயில்நிலையம்!

நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்குள் நூறு ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் நூறாவதாக உதகமண்டலம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ரயில்வே துறையின் ரயில்டெல் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த வசதியின் மூலம், ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் வரை இன்டெர்நெட் வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டின் இறுதியில் மேலும் 300 ரயில் நிலையங்களில் அதிவேக இன்டெர்நெட் வழங்கும் இலவச வைஃபை வசதி ஏற்டுத்தப்படும் என சமீபத்தில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி அளித்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!