வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (23/12/2016)

கடைசி தொடர்பு:15:04 (23/12/2016)

தமிழகத்தில் விரைவில் 'Cashless' ரேஷன் கடை!

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் மின்னணு பரிவர்த்தனை முறையை மக்களுக்கு உகந்த வகையில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என  உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறினார்.

பொது விநியோக திட்டத்தின் கீழ் இயங்கும் நியாவிலைக்கடைகளில் 2017-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் மின்னணு முறை அமலாக்குவது குறித்து உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறுகையில், ’நியாயவிலைக் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை முறையை மக்களுக்கு உகந்த வகையில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் நியாயவிலை கடைகள் உள்ளன. 20 ஆயிரம் கடைகள் நிரந்தரமாகவும், 15 ஆயிரம் கடைகள் தற்காலிக இடங்களில் உள்ளன. மின்னணு பரிவர்த்தனை அமல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்’, எனத் தெரிவித்துள்ளார்.

- சி.தேவராஜன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க