வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (25/12/2016)

கடைசி தொடர்பு:10:25 (25/12/2016)

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேகத்திற்காக கோவிலை புதுப்பிக்கும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதையடுத்து கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களையும் சீரமைத்து, புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹாகும்பாபிஷேகம் 06.02.2017 (தை 24-ம் தேதி) மீன லக்கினம், ரோஹிணி நட்சத்திரத்தில், காலை 9.05 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

-கா.முரளி

நீங்க எப்படி பீல் பண்றீங்க