தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் எங்களுக்கானது!-தமிழிசை

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், "ராம மோகன ராவ் வீட்டில் சோதனையின்போது கிடைத்தவற்றை வைத்து தமிழகத்தில் ஊழல் பயங்கரமாக நடைபெற்றுள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தன்னிச்சையான செயல்பாடு. வருமான வரித்துறையின் மூலம் மத்திய அரசு மிரட்டும் விதமாக, இந்த சோதனைகள் நடத்தி வருகிறது என்று பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறான கருத்து. திருநாவுக்கரசர் வருமான வரிச்சோதனைக்கு எதிராக பேசுவது, ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஆதரிப்பது போன்ற செயலாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா போன்ற மிகப்பெரும் அரசியல் கட்சித்தலைவரின் மறைவிற்குப் பின் மாபெரும் வெற்றிடம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை பா.ஜ.க.வால் மட்டுமே நிரப்ப முடியும்" என்று குறிப்பிட்டார்.

- சே.சின்னதுரை 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!