வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (26/12/2016)

கடைசி தொடர்பு:18:51 (26/12/2016)

ஆழிப்பேரலையின் 12 ஆண்டுகள்! (Album)

ஆழிப்பேரலை

ழிப்பேரலை, பெயரில் இருக்கும் அழகியலைப் போல பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலைகள் கரையில் நிகழ்த்திவிட்டுச் சென்ற தாக்கங்கள் அழகியல் அல்ல, அதிர்ச்சி அலைகள். கடலின் கீழ்மட்டத்தில் ஏற்படும் நிலநடுக்கம்தான் அலைகள் உயர எழுந்து கரைகளை விழுங்கும் ஆழிப்பேரலையாகிறது. அப்படி 2004 -ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அலைகள் எழும்பி தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை, இந்தியா என அனைத்து நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.

ரிக்டர் அளவுகோலில் 9.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம்தான் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டது. நிலநடுக்கம் உருவாக்கிய ஆழிப்பேரலை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களைப் பலி வாங்கியது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 6400. தமிழகத்தில் மட்டும் 2758 பேர் இறந்தனர். குமரியில் நிறுவப்பட்டிருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் உயரம் வரை அலைகள் எழுந்ததாகப் பதிவானது. வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் உப்பு அலைகள் அடித்துச்சென்றன. அது மட்டுமல்லாமல் 50 சதவிகிதம் அளவுக்கானப் பொருளாதார இழப்பீட்டையும் தமிழகம் சந்தித்தது. சில கருப்புச் சுவடுகள் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனதை விட்டு அகலாமல் நினைவில் இருக்கும். அழிப்பேரலையின் 12 ஆண்டுகள் ஆல்பத்தைக் காண இங்கே க்ளிக் செய்யவும். 

-ஐஷ்வர்யா

அழிப்பேரலையின் 12 ஆண்டுகள் ஆல்பத்தைக் காண இங்கே க்ளிக் செய்யவும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்