வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (27/12/2016)

கடைசி தொடர்பு:13:31 (27/12/2016)

இது தான் சென்னை மெட்ரோவின் அடுத்த கட்டம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த விரிவான திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி, 104 கிலோ மீட்டர்  தொலைவுக்கு  104 ரயில் நிலையங்களுடன் உருவாக்கப்பட உள்ளது. மாதவரம்-சிப்காட், கோயம்பேடு -கலங்கரை விளக்கம், மாதவரம் - சோளிங்கநல்லூர் உள்ளிட்ட  மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற உள்ளது. அதாவது, மாதவரத்தில் இருந்து பாடி, வளசரவாக்கம் மற்றும் மேடவாக்கம் வழியாக சிப்காட் வரை ஒரு தடம் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் இருந்து  கலங்கரை விளக்கம் வரை ஒரு தடம். மாதவரத்திலிருந்து பெரம்பூர், லஸ், அடையாறு மற்றும் ECR வழியாக  சோளிங்கநல்லூர் வரை ஒருத் தடம் அமைக்கப்பட உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க