மக்கள் நலக்கூட்டணி முறிந்தது! வைகோ வெளியேறினார்

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளது கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. பின்னர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது இந்த கூட்டணி. ஆனால், தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும், 7 மாத காலமாக இந்த கூட்டணி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது.

இந்த நிலையில், மதிமுக உயர்மட்டக்குழு வைகோ தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்தார்.

மேலும், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் அதன் தலைவர்களுடன் நட்பு தொடரும் என்று வைகோ கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!