பேசியது ரூ.3.50 லட்சம்; கொடுத்தது ரூ.50 ஆயிரம்- சிக்கிக்கொண்ட டிஎஸ்பி

புகாரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக ரூ.3.50 லட்சம் லஞ்சம் கேட்ட வேலூர் மாவட்ட டி.எஸ்.பியாக உஸ்மான் அலிகானை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் அளித்த புகார் குறித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக வேலூர் மாவட்ட டி.எஸ்.பி. உஸ்மான் அலிகான், ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. மேலும், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு லஞ்சம் தருவதாக குமரேசன் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், முதல் தவணையாக குமரேசன் ரூ.50 ஆயிரம் செலுத்திய நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், டி.எஸ்.பி.உஸ்மான் அலிகானை இன்று அதிரடியாக கைது செய்தனர். 

படம்: வெங்கடேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!