ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம்

தமிழகத்தில் இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள், ஆதார் அட்டைக்கு பதிவுசெய்துவிட்டு ஆதார் எண் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் போன்றவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன. இன்று முதல் 301 இடங்களில் 2 மாதங்களுக்கு இந்த முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேவையைப் பெற ஏதுவாக, ஆதார் உதவி மையங்களை தமிழகத்தின் அனைத்து 285 வட்டாட்சியர் அலுவலகங்கள் , சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள்  மற்றும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!