இப்படியெல்லாம் நடக்கிறது! இது ஆதார் வினோதம்

ஒரு ஆதார் அட்டை பெறுவதற்கு சிரமங்கள் இருக்கும் நிலையில், ஒருவருக்கு இரண்டு ஆதார் அட்டை கிடைத்துள்ளது. இந்த வினோத சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.

மத்திய, மாநில அரசின் சலுகைகள் மற்றும் மானியங்களைப் பெற ஆதார் எண் முக்கியம். தமிழகத்தில் ஏராளமானோர் இன்னும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர். ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தும் இதுவரை கிடைக்காதவர்களும் இருக்கின்றனர். இதனிடையே, ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு மேலும் 2 மாதங்கள் நீட்டித்துள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டாச்சியர் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஒரே நபருக்கு வெவ்வேறு பதிவு எண்களில் இரண்டு ஆதார் அடையாள அட்டை இருக்கிறது. புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி (85) என்பவருக்குதான் இரண்டு ஆதார் அட்டை வந்துள்ளது. முதலில் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார் சக்கரவர்த்தி. ஆறு மாதங்கள் ஆகியும் ஆதார் அட்டை வரவில்லை. இதனால் மீண்டும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். ஒரு மாதம் கழித்து இவருக்கு வெவ்வேறு பதிவு எண்களோடு இரண்டு ஆதார் அட்டைகள் கிடைத்துள்ளன. 

செய்தி, படம்: அரவிந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!