வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (30/12/2016)

கடைசி தொடர்பு:14:46 (30/12/2016)

சேகர் ரெட்டி ஜாமீன் மனுவும், சிபிஐ மனுவும் தள்ளுபடி!

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேகர் ரெட்டி உள்பட 5 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அண்மையில் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சேகர் ரெட்டி வீட்டில் மட்டும் ரூ.147 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜாமீன் கேட்டு 5 பேரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க