வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (01/01/2017)

கடைசி தொடர்பு:15:42 (01/01/2017)

புதுக்கோட்டை அருகே வெடி விபத்து: 2 பேர் பலி

புதுக்கோட்டை கீழநெல்லிக்கோட்டையில் நாட்டு வெடி ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க