தம்பிதுரை அறிக்கை எதிரொலி: சசிகலாவுடன் முதல்வர் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை கூறிய நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போயஸ் கார்டனில் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்.

ஆட்சியும், கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களும், செயல்திறன் இல்லாத நிலைக்கும் அரசு தள்ளப்படும் என்றும், இதனால் சசிகலா உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகி செங்கோட்டையன் ஆகியோர் போயஸ்கார்டன் வந்தனர். அவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!