வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (02/01/2017)

கடைசி தொடர்பு:10:30 (03/01/2017)

மெரினாவில் பைக் ரேஸ்.. பத்து பேர் கைது

                  

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

புத்தாண்டு அன்று பைக் ரேசில் ஈடுபடுபட்டதால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். இந்நிலையில், புத்தாண்டு அன்று நள்ளிரவில் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை சிலர் பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது, சிலரை போலீசார் துரத்தியபோது, அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம், குறிப்பிட்ட வாகனங்களின் பதிவெண்களைக் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து 4 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 10 பேரை அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க