ஜெ. பரிசாக கொடுத்த இனோவா காரை ஒப்படைத்தது ஏன்? நாஞ்சில் சம்பத் விளக்கம்

ஜெயலலிதா பரிசாக கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் இன்று ஒப்படைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவின் தலைமையை பிடிக்காமல் நடிகர் ஆனந்தராஜ் அண்மையில் அதிமுகவில் இருந்து விலகினார். மேலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருவதோடு, தலைமை ஏற்க வரும்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

 

இந்த நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா பரிசாக கொடுத்த இனோவா காருடன் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்குள்ள நிர்வாகிகளிடம் காரை ஒப்படைத்து விட்டு அவர் சென்று விட்டார். அன்றே விகடனில் 'முகாம் மாறவிருக்கிறார் நாஞ்சில் சம்பத்' என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

 

இந்த நிலையில், இனோவா காரை ஒப்படைத்தது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத். அதில், "2012 டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரசாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார். அந்த காரை கட்சியின் பிரசாரத்தை தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை. பிரசாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும். இப்போது 8 மாத காலமாக பிரசாரம் இல்லை. வீணாக அதை வைத்து கொண்டு இனோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, அதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனாலேயே அவர் இனோவா காரை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

படங்கள்:தே.அசோக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!