திமுக பொதுக்குழு - கருணாநிதி பங்கேற்கவில்லை! மு.க.ஸ்டாலின் செயல் தலைவரானார்! | DMK general body meeting, Karunanithi unlikely to attend

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (04/01/2017)

கடைசி தொடர்பு:11:25 (04/01/2017)

திமுக பொதுக்குழு - கருணாநிதி பங்கேற்கவில்லை! மு.க.ஸ்டாலின் செயல் தலைவரானார்!

இன்று தி.மு.க-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் பொதுக்குழு நடந்து வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க-வின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

பல முக்கிய முடிவுகள் குறித்து இந்த பொதுக்குழு கூறப்படும் என்று தகவல்கள் வந்த நிலையில், தி.மு.க-வின் தலைவர் மு.கருணாநிதி இதில் பங்கேற்ப் போவதில்லை என்று கூறப்பட்டது. முதன்முறையாக, தி.மு.க தலைவர் கருணாநிதி இல்லாமல் அக்கட்சியின் பொதுக்குழு நடக்கிறது. கருணாநிதி இல்லாத காரணத்தால், தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுக்குழு நடந்து வருகிறது. 

இந்த பொதுக்குழுவில், திமுக-வின் பொருளாளர் ஸ்டாலின், அக்கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ.ராமசாமி, கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மு.க.ஸ்டாலின் செயல் தலைவரானார்!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

திமுக தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு வழங்கப்படும்!

திமுக-வின் பொருளாளராகவும் மு.க.ஸ்டாலின் நீடிப்பார்.

பொதுச் செயலாளர் க.அன்பழகன் தீர்மானத்தை முன்மொழிய துரைமுருகன் வழிமொழிந்தார்

திமுக சட்ட விதி 18ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது

மு.க.ஸ்டாலின் கண்ணீர்!

திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பேச்சை கேட்டு மு.க.ஸ்டாலின் கண்ணீர்!

 

- படங்கள்: பா.காளிமுத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க