வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (04/01/2017)

கடைசி தொடர்பு:12:16 (04/01/2017)

சிவாஜி சிலையால் மட்டும்தான் போக்குவரத்துக்கு இடையூறா? வைகோ ஆவேசம்

சென்னை மெரினா கடற்கரையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், இதனால் சிலையை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று பதில் அளித்த தமிழக அரசு, மே 18-ம் தேதிக்குள் சிவாஜி சிலை அங்கிருந்து அகற்றப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சிவாஜி சிலையை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிவாஜி சிலையை மெரினா கடற்கரையிலேயே வைக்க வேண்டும் என்றும், எத்தனையோ சிலைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நிலையில் சிவாஜி சிலையை அகற்றுவது வேதனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க