புஹாரி குழுமத்தில் 2-வது நாளாக ரெய்டு!

புஹாரி குழுமத்தின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறையினர்  இரண்டாவது நாளாக, இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, நேற்று நடைபெற்ற சோதனைகளில் மட்டும் புஹாரி குழுமம் ரூ.100 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சோதனை மேலும், 3 நாட்களுக்கு தொடரும் என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய குழுமம் என்பதால் நிறைய ஆவணங்களை சோதித்து பார்க்க வேண்டியள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் இன்று 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமனவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!