பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய வழக்கில் 2 பேர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த லாவண்யா மீது, கடந்த மாதம் 23-ம் தேதி மர்ம நபர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்த வழக்கு குறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் திருப்பத்தூர் போலீசார்  தேடி வந்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன், டி.எம்.சி. காலனியைச் சேர்ந்த பசுபதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகன்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சிவகுமார் என்ற என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!