வெளியிடப்பட்ட நேரம்: 21:29 (05/01/2017)

கடைசி தொடர்பு:21:28 (05/01/2017)

தமிழக அரசு மீது ஸ்டாலின் காட்டம்..!

கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் தங்கள் மாநிலத்தை வறட்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்ட நிலையில், தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

'கர்நாடகம் வறட்சி மாநிலம் அறிவிக்கப்பட்டு, மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுவிட்டது. கேரளாவும் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அண்டை மாநில அரசுகள் எல்லாம் அசுர வேகத்தில் செயல்படும் போது, அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது.' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க