பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

'ஜெகதாம்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இலங்கைச் சிறைகளில் உள்ள 61 மீனவர்கள் மற்றும் 116 படகுகள் ஆகியவற்றை உடனடியாக அந்நாட்டு அரசு விடுவிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு காண பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இலங்கை அரசு இப்படி நடந்து கொள்வது துரதிர்ஷ்டமானது. மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி விடுவதால், அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, மீனவர்கள் நலனை காக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!