வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (06/01/2017)

கடைசி தொடர்பு:10:54 (06/01/2017)

விரைவில் நிறைவேற்றுங்கள்! பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்

எம்ஜிஆருக்கு சிறப்பு நாணயம் வெளியிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என்றும், சிறப்பு நாணயம், சிறப்பு அஞ்சல்தலை தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க