வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (06/01/2017)

கடைசி தொடர்பு:20:35 (06/01/2017)

இளவரசன் மரணம்: எஸ்.பி.,யிடம் விசாரணை!

தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பாக, உண்மை நிலையை அறிய நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழு, இது தொடர்பாக  ஏற்கெனவே18 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில், இளவரசன் மரணத்தின் போது, தர்மபுரி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த அஸ்ரா கார்க்கிடம், இந்தக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அஸ்ரா கார்க் தற்போது சி.பி.ஐ உயர் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அப்போது, தர்மபுரி ஆட்சியராக இருந்த லில்லி உள்பட 70 பேரிடம் இந்தக்குழு விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க