சசிகலாவை சந்தித்த நடிகர்கள்! | Actor Srikanth, Karan meets Sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (07/01/2017)

கடைசி தொடர்பு:12:27 (07/01/2017)

சசிகலாவை சந்தித்த நடிகர்கள்!

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சசிகலாவை, நடிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கரண், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இன்று காலை போயஸ் கார்டன் இல்லம் வந்தனர். அவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க