வெளியிடப்பட்ட நேரம்: 22:27 (07/01/2017)

கடைசி தொடர்பு:22:27 (07/01/2017)

வருகிறதா பொதுக்கட்டட விதிமுறை?

Tamilnadu goverment logo

தமிழகத்தில் பொதுக் கட்டட விதிமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான செயல் திட்டத்தை, தமிழக அரசு தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், கட்டடம் கட்ட ஒரே விதிமுறை விதிக்கப்படும். குறிப்பாக, வசிப்பிட சான்றிதழ், நிறைவு சான்றிதழ் ஆகியவை கட்டடம் கட்ட முக்கியம் என்ற விதிமுறை விதிக்கப்படுமாம். அதேபோல், கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி பாதை அமைக்க வேண்டும், அவசர வழி அமைப்பது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க