சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் கூடிய இளைஞர்கள்...! | Chennai youth came together and voiced for Jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (08/01/2017)

கடைசி தொடர்பு:13:41 (08/01/2017)

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் கூடிய இளைஞர்கள்...!

Protest in Chennai Marina

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai Marina Jallikattu protest

'தமிழகத்தில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதே பேரணியில் கலந்து கொண்டவர்களின் கோரிக்கை.

சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலைவரை இந்த பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் பெரும்பாலானோர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

-செ.சல்மான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க