வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (09/01/2017)

கடைசி தொடர்பு:11:08 (09/01/2017)

சென்னை: இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா!

இந்தியா டுடேயின் இரண்டு நாள் ஊடக மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் துவங்கியது. இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுசெயலாளர் சசிகலா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டை குத்துவிளக்கேற்றி சசிகலா துவங்கி வைத்தார். மேலும், மாநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தையும் சசிகலா திறந்து வைத்தார்.

India today summit chenni Sasikala

தென்னிந்தியாவில் முதல்முறையாக நடக்கும், இந்தியா டுடே மாநாட்டில் ஆறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா டுடே மாநாட்டில் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், 'நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொழில் முதலீடு செய்வதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொழில்துறையில் அதிக வேலை வாய்ப்பை தரும் மாநிலமாக, தமிழகம் மாறி வருகிறது.  தமிழகம் தொழில்புரிய ஏற்ற மாநிலமாக இருப்பதாக, உலக வங்கியே பாராட்டியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது, ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் முன்னேறி வருகிறது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க