வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (09/01/2017)

கடைசி தொடர்பு:18:32 (09/01/2017)

'காளைகள் எங்கள் வீட்டுப் பிள்ளை'!- அலங்காநல்லூரில் விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தேமுதிக சார்பில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

Vijaykanth

போராட்டத்தின் போது விஜயகாந்த் பேசுகையில், 'தமிழர் கலாசாரத்தை வென்றெடுப்போம். நான் சிறுவயதிலேயே ஜல்லிக்கட்டுக்கு சென்றவன். காளைகளை எங்கள் வீட்டின் பிள்ளைகளைப் போன்றுதான் பார்க்கிறோம். பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.


படம்: சதீஸ்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க