வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (09/01/2017)

கடைசி தொடர்பு:15:51 (09/01/2017)

கலப்புத் திருமணத்தில் சாதி, மதம் கூடாது! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கலப்புத் திருமண பதிவில் மதம், சாதியை குறிப்பிட வேண்டாம் என்று அரசாணை பிறப்பிக்கக்கோரிய வழக்கில் தமிழக பதிவுத்துறை தலைவர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கலப்புத் திருமண பதிவில் மதம், சாதியை குறிப்பிட வேண்டாம் என்று அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக பதிவுத்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க