வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (09/01/2017)

கடைசி தொடர்பு:15:51 (09/01/2017)

உதய் திட்டத்தில் இணைந்தது தமிழகம்!

மின்சீரமைப்பு திட்டமான உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த உதய் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் சேர்ந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சர் தங்கமணி உதய் திட்டத்தில் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த திட்டத்தில் தமிழகம் இணைவதன் மூலம், ரூ.11,000 கோடி வரை பயன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல, ஏற்படும் இழப்பீட்டில் தமிழகம் 75% வரை ஏற்க நிர்பந்திக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது தமிழகத்தின் சார்பில், 3 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது மற்றும் நிதிபத்திர முடிவு காலம் 15 ஆண்டுகளாக இருக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க