மர்மக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மீண்டும் மர்மக்காய்ச்சல் பரவிவருகிறது. புதுகும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, இருளர் காலனி ஆகிய பகுதியில் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 39 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் மர்மக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகி உள்ளது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளதால், அவர்களும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!