Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டுக்கு தடை! உங்கள் கருத்து என்ன? சர்வே முடிவுகள்! #SurveyResults

ஜல்லிக்கட்டு

மிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் அந்த விளையாட்டுக்கான தடையை உச்ச நீதிமன்றம்  நீடித்துள்ளது. மேலும், ‘பீட்டா’ என்ற விலங்குகள் நல அமைப்பும், போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஆதரித்து வருகிறது. "ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால், பிரியாணிக்கும் தடை விதிக்க வேண்டும்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, “ஜல்லிக்கட்டுக்கு தடை! உங்கள் கருத்து என்ன?” என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மக்கள் கூறியுள்ள கருத்துகளும் கீழே...

ஜல்லிக்கட்டு குறித்த உங்கள் கருத்துகளை ஓரிரு வார்த்தைகளில் பதியவும். 

(வாசகர்களின் கருத்துகள்)

*தமிழ் நாட்டின் அடையாளம்

*என் மரபும் என் இனமும் - என் உரிமை 

*ஜல்லிக்கட்டு பாரம்பரிய மிக்க விளையாட்டு அதை தடைசெய்யக் கூடாது 

*தமிழனின் பாரம்பரியம் இது... ! இனி ஒரு... இனி ஒரு... விதி செய்வோம்... ! தடை அதை உடை.... ! 

*beta wants to bring foreign breeds of animals into india so by stopping jallikattu local breeds will slowly disappear  from our native .So to protect our own breeds these  type of games should be allowed

*தமிழின அடையாளங்கள் இந்துத்துவா அடையாளங்களுக்கு நேரெதிரானது. கீழடி ஆய்வை திட்டமிட்டு மறைத்தார்கள் அதற்கு பின்னணியும் இதுதான். இந்தியாவிலிருக்கும் பண்பாடுகளில் இந்து மதத்துக்கு நேரடியாக சவால் விடக்கூடியது தமிழர் பண்பாடுதான். இந்து மதமே தமிழர் அடையாளங்களை அழிப்பதற்காக உருவானதுதானே.

*தகுதியான அரசியல்வாதிகளிடம் நாடு சிக்கிக் கொண்டு பரிதாபமான நிலையில் உள்ளது. இவர்களால் எந்த விஷயத்திலும் குழப்பம் விளைவிக்க முடியும்.வாழ்க ஜனநாயகம்!

*50 பேர் 100 பேர் சேர்ந்து காளையை விரட்டிப் பிடிக்காமல், 10 பேரை மட்டும் ஒரு நேரத்தில் அனுமதிக்கலாம். கூட்டம் கூட்டமாக காளைகளை பிடிப்பதில் ஒரு கட்டுப்பாடு கொண்டுவரலாம். மாட்டின் கொம்பில், ஏதேனுமொரு பிளாஸ்டிக் உரை இருக்க வேண்டும். இல்லையேல் கொம்பு நம்மைக் குத்திக் கிழிக்க வாய்ப்புள்ளது.

*இது எங்கள் உயிர் மூச்சு இது எந்த அமைப்பாலும் தடுக்க முடியாது. தடுக்க நெனச்சா அது அவர்களது அறியாமை சுயநலம் வன்கொடுமை சிலரது தவரான தூண்டுதல் பார்வை இனி வரும் காலம் பதில் சொல்லாது எங்கள் காளைகளை கொண்டு பதில் சொல்லவோம் இது அதிகாரகாரர்களுக்கும் தய வஞ்சகற்களுக்கு ஒரு எச்சரிக்கை 

*யாருக்காகவும் நம் பாரம்பரியத்தை விட்டுகொடுக்கக் கூடாது

*சல்லிக்கட்டு என்ற பெயர் தான் ஜல்லிக்கட்டு மாறி உள்ளது. ஐநாவில் சபை இனம் சார்ந்த பாரம் பரியத்தை தடை செய்ய கூடாது என்று கூறும்போது எப்படி சல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க முடியும். 

*தற்போது மத்தியில் ஆளும் அரசு மிக மிகத் தீவிரமாகவும், முன்பு ஆண்ட அரசு தீவிரமாகவும் தமிழர்களின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழிக்கிற செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. இது இன காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு, இன அழிப்பினை மறைமுகமாக செய்கின்றனர். தமிழ் இனத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடு. இந்தியாவின் சிறப்பே பல கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட ஒரு நாடு என்பதுதான், ஆனால் மத்தியில் ஆளும் அரசு இந்த ஒருமைப்பாடினை சிதைக்கும் செயல்களை செய்து வருகிறது. 

*பாரம்பரியத்தை அழித்த எந்த இனமும் செழித்ததாக வரலாறு இல்லை

*ஏறுதழுவுதல் எம்மினத்தின் வீரம். உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்த இனம், காட்டுமிராண்டி கூட்டமல்ல !!!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னூட்டமாக இடுங்கள்.      

- நந்தினி சுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement