வால்பாறையில் யானைகள் அட்டகாசம்! 

வால்பாறையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், கடந்த இரண்டு நாட்களாக யானைகள் புகுந்து 4 வகுப்பறைகளின் கதவுகளை உடைத்துக்கொண்டு, உள்ளே புகுந்துள்ளது. இதில் கதவு, ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் உடைந்தன. மேலும், இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து யானைகள் அப்பகுதிக்கு அடிக்கடி வருவதால், பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும், வகுப்பறைகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!