வீட்டுமுன் யுவன் சங்கர் ராஜா மவுனப் போராட்டம்! 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு நேற்று மௌன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு பலரும் சாலை ஓரங்களில், தங்கள் வீடுகளின் எதிரில், பொது மைதானங்களில் மவுனமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு விடுத்த போராட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டு தனது நுங்கம்பாக்கம் அலுவலகம் முன்பாக வெளியே வந்து 10 நிமிடங்கள்  நின்றார். அவருடன் அலுவலக ஊழியர்களும் இணைந்துகொண்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!