சுப்ரமணியன் சாமியின் கருத்துக்கு இல.கணேசன் விளக்கம் | L. Ganesan gives explanation for subramaniya swamy's tweet

வெளியிடப்பட்ட நேரம்: 01:56 (13/01/2017)

கடைசி தொடர்பு:10:28 (13/01/2017)

சுப்ரமணியன் சாமியின் கருத்துக்கு இல.கணேசன் விளக்கம்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கருத்து கூறியிருந்தார். இதற்கு வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து கூறியவர்களை, மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்தார். இந்நிலையில், பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்து குறித்து விளக்கம் அளித்த பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், சுப்ரமணியன் சுவாமியின் கருத்து, அவரது சொந்தக் கருத்து என்று விளக்கம் அளித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சுப்ரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவதும், அதற்கு பாஜக தரப்பிலிருந்து யாராவது ஒருவர், "சுப்ரமணியன் சுவாமியின் கருத்து, அவரது சொந்தக்கருத்து" என்று விளக்கம் தருவதும் வாடிக்கையாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க