வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (13/01/2017)

கடைசி தொடர்பு:15:01 (13/01/2017)

தேசிய அவமானம்! சகாயம் ஐஏஎஸ் வேதனை

தமிழக விவசாயிகளின் மரணம், தேசிய அவமானமாக கருதப்பட வேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் வேதனை தெரிவித்துள்ளார்.Sagaym IAS

நாமக்கல்லில் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'தமிழக விவசாயிகளின் மரணம், தேசிய அவமானமாக கருதப்பட வேண்டும். விவசாயிகளின் குடும்பங்களுக்கு அனைவரும் உதவ வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடுவது நம்பிக்கையளித்துள்ளது. அதனால், ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க