அவனியாபுரம் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு | Jallikattu in near Avaniyapuram

வெளியிடப்பட்ட நேரம்: 07:54 (14/01/2017)

கடைசி தொடர்பு:11:21 (14/01/2017)

அவனியாபுரம் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மதுரை அவனியாபுரம் அருகே தற்காலிக வாடிவாசல் அமைத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். இதில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை கரிசல்குளம் அருகே நேற்றும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது  குறிப்பிடத்தக்கது. அதேபோல், தேனியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க