அலங்காநல்லூரில் நள்ளிரவிலும் தொடரும் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை தொடரும் ஜல்லில்கட்டு ஆதரவாளர்களை சந்தித்து வாழ்த்து கூற  திருவாடனை எம்.எல்.ஏ. கருணாஸ் வந்தார்.

போராட்டக்காரர்கள் சிலர் அங்கேயே படுத்து உறங்குகின்றனர். உறங்குபவர்களை காவல் காத்தபடி போலீஸ் தூங்காமல் இருக்கிறது. நள்ளிரவை தாண்டியும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'ஜல்லிக்கட்டுக்காக மக்கள் நடத்தும் அறப்போராட்டம் வெற்றிப் பெற வேண்டும்' என்றார் இசையமப்பாளர் ஹிப் ஆப் தமிழா. மேலும் 'போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் மாணவர்கள், பொதுமக்கள், உணர்வாளர்கள் கட்டுக்கோப்பாக அமைதியான வழியில் போராடி வருகின்றன. அதே நேரத்தில் அவர்களின் மனதில் தகிக்கும் உணர்வு இருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு உறுதியாவதற்கு இந்தப் போராட்டம் தொடர வேண்டும்' என்றார்.

செ.சல்மான்

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!