வெளியிடப்பட்ட நேரம்: 04:17 (17/01/2017)

கடைசி தொடர்பு:10:51 (18/01/2017)

ஜல்லிக்கட்டு... மெரீனாவில் மீண்டும் திரளும் இளைஞர்கள்!

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி, கடந்த 8-ம் தேதி மெரீனாவில் இளைஞர்கள் பெரும் திரளாக ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இவர்களை ஒருங்கிணைத்தது சமூக வலைத்தளங்களே. 

அதேபோல அலங்காநல்லூரில் நேற்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரும் போராட்டம் விடிய விடிய நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் மீண்டும் மெரீனாவில் இளைஞர்கள் ஒன்றுகூட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. அலங்கா நல்லூரில் போராடி வருபவர்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அழைப்பு விடுப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க