வெளியிடப்பட்ட நேரம்: 06:21 (17/01/2017)

கடைசி தொடர்பு:10:50 (18/01/2017)

அலங்காநல்லூரில் குவியும் இளைஞர்கள்!

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டை ஆதரித்து அலங்காநல்லூரில் இளைஞர்களின் போராட்டம் 20 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரைக்கு இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஊர்மக்கள் இவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். போலீஸ் போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து போராட்டத்துக்கு வலுசேர்க்கும் இளைஞர்கள் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்து மதுரைக்கும் வரும் இளைஞர்களை போலீஸ் பல இடங்களில் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க