போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீஸ்!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு நிலவி வரும் தடையை நீக்கக் கோரி கிட்டத்தட்ட 21 மணி நேரத்துக்கும் மேலாக இளைஞர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, அவர்களை வலுகட்டாயமாக கைது செய்துள்ளனர் போலீஸார். 

'அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் சட்ட விரோதமானது. இந்த பகுதியிலிருந்து 10 நிமிடத்துக்குள் கலைந்து செல்லுங்கள்' என போலீஸ் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர். அதுமட்டுமின்றி, போலீஸ் போராட்ட இடத்தை சுற்றி வளைத்துள்ளது. போராட்டக்காரர்கள் காவலர்கள் கூறியதை கேட்காததால் அவர்களை வலுக்கட்டயமாக கைது செய்து இழுத்து சென்றுள்ளனர். 'போராட்டத்தை அனைத்து ஊர்களிலும் தொடருங்கள்' என கைதானவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். அதேபோல, கைதாகும்போது போராட்டக்காரர்கள் பீட்டாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். 

அதன்பிறகு, சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி திருமண மண்டபங்களில் கைதானவர்களை அடைத்துள்ளனர் காவல் துறையினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!