வெளியிடப்பட்ட நேரம்: 23:36 (17/01/2017)

கடைசி தொடர்பு:11:00 (18/01/2017)

ஓ.பி.எஸ் எங்கே? மெரினாவில் இளைஞர்கள் கோஷம்

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சென்னை மெரினாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4 கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் 17 மணி நேரமாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் முதல்வர் எங்கே? என்ற வாசகங்களுடன் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.

போலிஸார் கடற்கறையில் விற்கும் உணவகங்களை மூட சொல்லி வெளியேற்றினர். மாணவர்களும் இளைஞர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து உணவுகளை கொண்டு வந்து போராட்டக்காரர்களுக்கு அளித்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க