போராட்ட களத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ்! அழைப்பு விடுக்கும் சிம்பு! | RJ Balaji, Simbu, GV Prakash Joins Jallikattu protest

வெளியிடப்பட்ட நேரம்: 00:55 (18/01/2017)

கடைசி தொடர்பு:10:59 (18/01/2017)

போராட்ட களத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ்! அழைப்பு விடுக்கும் சிம்பு!

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வரும் வேளையில் ஆர்.ஜே.பாலாஜி போராட்டக்களத்தில் இளைஞர்களை சந்தித்து பேசி வருகிறார். ஏற்கெனவே பாலாஜி ஜல்லிக்கட்டு ஆதரவாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் எந்த கட்சி சார்பும் இல்லாமல் நடந்து வருகிறது. 

 

இதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் போராட்ட களத்தில் இணைந்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நடிகர் சிம்பு ஏற்கெனவே தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை இரவு 8 மணிக்கு வீட்டுக்கு அருகிலேயே போராட்டத்தை துவங்குவோம். மேலும் இதற்கான தடை நீங்கும் வரை போராட்ட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க