தமிழக அரசு சார்பில் இளைஞர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், இளைஞர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அறவழியில் அரசியல் சார்பற்று அமைதியான வழியில் நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் அரசு சார்பில் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து எங்கள் கோரிக்கையை கேட்கவில்லை என்று போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் ஜனநாயக ரீதியான இந்த போராட்டத்தை தமிழக அரசு மதிக்கிறது என்றும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தமிழக மீன் வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார்.  


இதையடுத்து பட்டினபாக்கத்தில் உள்ள அமைச்சர் டி.ஜெயக்குமார் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த  பேச்சுவார்த்தையில் போராட்ட களத்திலிருந்து 10 பேர் கொண்ட குழுவினர்  பங்கேற்றுள்ளனர்.  இதில் அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!