வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (18/01/2017)

கடைசி தொடர்பு:12:11 (18/01/2017)

#Breaking பிரதமருக்கு நடிகர் விஷால் திடீர் கடிதம்!

ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் வலுத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தாமாக முன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை. அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்க நீங்கள் (பிரதமர்) நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக நேரில் பேச எனக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த கடிதம் பிரதமர் அலுவலகத்தின் பேக்ஸ், பதிவு தபால், இ-மெயில் ஆகியவற்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

- எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க