ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சூழ்ச்சி! பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் | Pon Radhakrishnan alleges conspiracy behind #Jallikattu Protests

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (18/01/2017)

கடைசி தொடர்பு:11:24 (18/01/2017)

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சூழ்ச்சி! பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், மாணவர்களின் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான், ஜல்லிக்கட்டு இல்லை என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஜல்லிக்கட்டுக்காக புதிய சட்டம் கொண்டு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும் என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க